1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 6 பிப்ரவரி 2020 (17:11 IST)

பூ விற்கும் பெண்ணிடம் ரு. 30 கோடி பணம் ! அதிகாரிகள் அதிர்ச்சி !

பெண்ணின் வங்கி கணக்கில் 30 கோடி வரவு

கர்நாடக மாநிலத்தில் சந்தையில் பூ விற்று வந்த பெண்ணின் வங்கி கணக்கில் ரூ. 30 கோடி பணம் வரவு வைக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுகுறித்து வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 
கர்நாடக மாநிலம் சன்னபட்னா என்ற பகுதியில் வசித்து வருபவர் மாலிக் புர்கான். இவருடைய மனைவி ராகியம்மாள்.  இவர்கள் இருவரும் பூ விற்று வருகிறார்கள்.
 
இந்நிலையில், ராக்கியம்மாள் வங்கி கணக்கிற்கு மிகப் பெரிய தொகை ஒன்று கைமாறியதாக கூறி வங்கி அதிகாரிகள் அவரை வங்கிக்கு அழைத்துச் சென்று அவரிடம் விசாரித்தனர்.
 
அதில், அவருடைய வங்கி கணக்கில் ரூ.30 கோடி பணம் வரவு வைகப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரது கணவர் கூறியுள்ளதாவது: ஆன்லைனில் சீலை வாங்கியதற்கு பரிசு கிடைத்துள்ளதாகக் கூறி, சிலர்  வங்கி புத்தகத்தை வாங்கிச் சென்றதாக மாலிக் தெரிவித்துள்ளார்.
 
இதனையடுத்து வருமான வரித்துறையினர் இருவரிடமும் விசாரணை நடத்தவுள்ளனர்.