வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 8 டிசம்பர் 2016 (16:14 IST)

வெள்ளத்தில் மிதக்கும் அந்தமான்!!

வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. புயலின் தாக்கத்தால் கனமழை கொட்டிவருகிறது.


 
 
அந்தமான் தீவுகள் முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது. அந்தமான் அருகே ஹேவ்லாக், நீல் தீவுகளுக்கு படகுப் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.
 
தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதால் ஹேவ்லாக் தீவில் 1,400 சுற்றுலா பயணிகள் தவிப்புக்குள்ளாகினர். வானிலை மோசமாக இருப்பதால் சுற்றுலாப் பயணிகளை மீட்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது என கடற்படை தகவல் தெரிவித்துள்ளது. 
 
இதனிடையே அந்தமான் தீவுகளில் கடும் மழையில் சிக்கிக் கொண்டவர்கள் பாதுகாப்பாக உள்ளனர் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 
 
புயலானது விசாகப்பட்டினத்தில் இருந்து 1,060 கிமீ மையம் கொண்டுள்ளது. முதலில் வடக்கு நோக்கி நகர்ந்து, பின்னர் வடமேற்கு திசையில் நகரும் என்றும் ஆந்திராவில் வரும் 11ம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.