வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2015 (20:08 IST)

5 நாளில் 3,250 கோடிக்கு பொருட்களை விற்க பிளிப்கார்ட் திட்டம்

பிளிப்கார்ட் நிறுவனம் வரும் பண்டிகைக்கால விற்பனைக்காக 5 நாள் சிறப்பு சலுகையில் 3 ஆயிரத்து 250 கோடிக்கு ஆன்லைன் மூலம் பொருட்களை விற்க இலக்கு நிர்ணயித்திருக்கிறது.
 

 
வரும் பண்டிகை காலங்களை முன்னிட்டு பிளிப்கார்ட் நிறுவனம் “பிக் பில்லினியன் டேஸ் சேல்“ என்று 5 நாட்களை அறிவித்து அதன் மூலம் ரூ.3,250 கோடி அளவிற்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
 
இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து மாதம் தோறும் 2 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் நடைபெற்றது. இதில் கடந்த செப்டம்பர் மாதத்தில் மிந்த்ரா விற்பனை நீங்கலாக 2 ஆயிரத்து 600 கோடி வர்த்தகம் நடை பெற்றுள்ளது.
 
பிளிப்கார்ட் நிறுவனத்தின் இந்த சிறப்பு சலுகையினால் இந்திய நிறுவனமான ஸ்னாப் டீல் ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற நேரடி ஆன்லைன் சில்லறை வர்த்தகத்தின் காரணமாக ஏராளமான நேரடி சில்லரை வர்த்தக நிறுவனங்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.
 
மேலும் இந்தாண்டு தீபாவளி விற்பனை நேரடி சில்லரை விற்பனையாளர்களுக்கு எதிர்பார்த்த அளவு வருமானம் வராது. அதற்கு பதிலாக ஆன்லைன் வர்த்தகத்தில் எதிர்பார்க்காத அளவில் விற்பனையின் அளவு உயரும் என வணிக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.