செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 9 மார்ச் 2022 (16:33 IST)

பெண்களிடம் மன்னிப்பு கேட்ட பிளிப்கார்ட்: காரணம் இதுதான்!

மகளிர் தினத்தை முன்னிட்டு ஆஃஅபர் வெளியிட்டிருந்த பிளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
நேற்று உலகம் முழுவதும் சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டதை அடுத்து சமையலறை உபகரணங்களுக்கு தள்ளுபடி என பிளிப்கார்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது 
 
சமையலறை என்றால்  பெண்களுக்கு மட்டுமே உகந்தது என்ற வகையில் வெளியிடப்பட்டிருந்த இந்த ஆஃபருக்கு கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து பெண்களின் எதிர்ப்பு காரணமாக பிளிப்கார்ட் நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது 
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் பெண்களுக்கு உகந்தது சமையலறை தான் என்பது போன்ற ஒரு கருத்தை தங்களது ஆஃபர் நினைக்கும் வகையில் இருந்ததால் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளது