Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

5 மாநில தேர்தல் முடிவுகள் - வாக்கு எண்ணிக்கை தொடங்கியது


Muurgan| Last Modified சனி, 11 மார்ச் 2017 (08:24 IST)
உத்தரப்பிரதேசம், மணிப்பூர், கோவா, பஞ்சாப், உத்தரகாண்ட் மாநிலத்தில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிந்து இன்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

 

 
5 மாநிலங்களுக்கும் சமீபத்தில் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. தேர்தல் முடிந்து கருத்துக்கணிப்புகள் வெளியானது. அதில், உத்தரபிரதேச மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும் என்று கருத்துக்கணிப்பு வெளிவந்துள்ளது. ரூ.500, ரூ.1000 செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்புக்கு இந்த மாநிலத்தில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் இந்த மாநிலத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்றும் அகிலேஷ் யாதவ் பதவியிழப்பார் என்றும் கூறப்படுகிறது.
 
அதேபோல் கோவா மாநிலத்தில் பாஜக 18 இடங்களும், காங்கிரஸ் 15 இடங்களும், ஆம்ஆத்மிக்கு 2 இடங்கள் மற்ற கட்சிகள் 5 இடங்களை பிடிக்கும் என தெரியவந்துள்ளது. எனவே இங்கு ஆட்சி அமைப்பது யார் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை உள்ளது.
 
உத்ரகாண்ட் மாநிலத்தை பொறுத்தவரை காங்கிரஸ் மற்றும் பாஜக சம இடங்களை பிடிக்கும் என்றும் மற்ற கட்சிகளின் ஆதரவை பொறுத்து இங்கு ஆட்சி அமையும் என்றும் கூறப்படுகிறது.
 
மணிப்பூர் மாநிலத்தில் பாஜக அதிக இடங்களை பிடித்தாலும் ஆட்சிக்கு தேவையான 31 இடங்களை பிடிப்பது கடினம் என்பதால் இங்கும் இழுபரி ஏற்படலாம் எனவும் பஞ்சாப் மாநிலத்தை பொறுத்தவரை ஆம்ஆத்மி அதிக இடங்களை பெற்று பெரும்பாணன்மையுடன் ஆட்சி அமைக்கும் என தெரியவந்துள்ளது. இந்த மாநிலத்தில் பாஜகவுக்கு படுதோல்வி கிடைக்கும் எனவும் கருத்துக் கணிப்பு வெளீயாகியுள்ளது.
 
இந்நிலையில் தற்போது விறுவிறுப்பாக வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :