1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 6 ஜனவரி 2022 (09:21 IST)

திட்டமிட்டபடி 5 மாநில சட்டமன்ற தேர்தல்: ஓரிரு நாட்களில் தேதி அறிவிப்பா?

கொரோனா வைரஸ் மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு நாடு முழுவதும் அதிகரித்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன
 
இந்த நிலையில் உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் தேதி திட்டமிட்டபடி நடைபெறும் என்றும் இன்னும் ஓரிரு நாட்களில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
உத்தரபிரதேசம் பஞ்சாப் உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிபூர் ஆகிய ஐந்து மாநில தேர்தல் வரும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த மாநிலங்களில் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது 
தேர்தலை நடத்துவதற்கு தேவையான துணை ராணுவ படை பாதுகாப்பு குறித்து தேர்தல் அதிகாரிகள் ஆலோசனை நடத்தியதாகவும் ஏற்கனவே சுகாதாரத்துறை அமைச்சர் நடத்திய ஆலோசனையில் தேர்தலை திட்டமிட்டபடி நடத்துவது உறுதி செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது 
 
மேலும் வாக்குபதிவு நேரத்தை அதிகரிப்பது பிரச்சாரங்களுக்கு தடை விதிப்பது குறித்த பரிசீலனையில் உள்ளதாக கூறப்படுகிறது