ஆர்பிட்டர் எடுத்து அனுப்பிய புகைப்படம்: ஆர்பரிக்கும் இஸ்ரோ!!
விண்ணில் ஏவப்பட்ட சந்திராயன் 2 ஆர்பிட்டர் நிலவின் புகைப்படம் ஒன்றை அனுப்பியுள்ளது. இதனை இஸ்ரோ தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
நிலவை சுற்றி வரும் சந்திராயன் 2 ஆர்பிட்டரில் உள்ள இன்ஃபராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி மூலம் எடுக்கப்பட்டுள்ளது முதல் படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. மேலும் இந்த கருவியின் மூலம் ஆய்வு தொடர்ங்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவித்துள்ளது.
தரையிறங்கும் போது தொலைத்தொடர்பை இழந்த விக்ரம் லேண்டர் முழுமையாக செயலற்று போனாலும் ஆர்பிட்டர் சிறப்பாகவே செயல்ப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ஆர்பிட்டரில் மொத்தம் 8 கருவிகள் உள்ளது. இந்த 8 கருவிகளில் 3 கருவிகள் மூலமாக மட்டுமே தகவல் பெறப்பட்டு வந்தது.
தற்போது இதனுடன் மேலும் ஒரு கருவியாக இன்ஃபராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி இணைந்துள்ளது. மேலும், இன்ஃபராரெட் ஸ்பெக்ட்ரோமீட்டர் கருவி நிலவின் மேற்பரப்பின் மீதுபட்டு எதிரொலிக்கும் சூரிய ஒளிக்கதிரை அளவீடு செய்து அங்கு இடம்பெற்றிருக்கும் தனிமன்களை அள்வீடு செய்ய உதவும் என தெரிகிறது.