1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: புதன், 15 ஜூன் 2016 (11:40 IST)

'முஸ்லிம்கள் இல்லாத இந்தியா' விவகாரம் - பெண் சாமியார் மீது வழக்கு

மதவாத உணர்வுகளை தூண்டியதாக விஷ்வ இந்து பரிஷத் தலைவர் சாத்வி பிராச்சிக்கு எதிராக எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 

 
ஹரியானாவில் சமீபத்தில் பாஜகவின் பெண் சாமியாரும் விஷ்வ இந்து பரிஷத் தலைவர்களுல் ஒருவருமான சாத்வி பிராச்சி “முஸ்லிம்கள் இல்லாத நாடாக இந்தியாவை உருவாக்குவதற்கு இதுவே சரியான நேரம் என்றும் அமீர்கானின் ’டங்கல்’ படத்தை  இந்துக்கள் தோல்வி பெறச் செய்ய வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
 
இவ்விவகாரம் ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் இரண்டு நாட்கள் பிரச்சனையை எழுப்பியது. இந்நிலையில் மதவாத உணர்வு களை தூண்டியதாக சாத்வி பிராச்சிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 
பகுஜன் முக்தி மோர்ச்சா அமைப்பை சேர்ந்த சந்தீப் குமார் தரப்பில் சாத்வி பிராச்சிக்கு எதிராக புகார் கொடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு எதிராக, ’மத அடிப்படையில் இருதரப்பினர் இடையே பகை உணர்வை ஏற்படுத்துதல் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு குந்தகம் மற்றும் அவதூறு ஏற்படுத்துதல்’ ஆகிய பிரிவின் கீழும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.