நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மருத்துவமனையில் அனுமதி: என்ன காரணம்?
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திடீரென டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
தற்போது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் திடீரென இன்று மதியம் 12 மணிக்கு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அனுமதிக்கப்பட்டுள்ளார்
அவருக்கு உடல் பாதிப்பு எதுவும் இல்லை என்றும் அவர் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார் என்றும் நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
மேலும் இன்னும் சில மணி நேரத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது
Edited by Mahendran