1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 மே 2018 (14:10 IST)

காவிரி விவகாரத்தில் இறுதி முடிவெடுக்க ஆணையத்திற்கே அதிகாரம் - நீதிமன்றம் தீர்ப்பு

காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் ஆணையத்திற்கே உண்டு என உச்ச நீதிமன்றம் தற்போது தீர்ப்பளித்துள்ளது.

 
காவிரி நீர் விவகாரத்தில் கடந்த 14ந்தேதி மத்திய அரசு செயல் வரைவு திட்டத்தை  உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ததது. அப்போது, காவிரி மேலாண்மை வாரியத்தை நாங்கள் அமைக்கவில்லை. மாறாக 10 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளோம் என மத்திய அரசு அறிவித்தது.
 
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கர்நாடக அரசியலில் குழப்பம் நிலவி வருவதால், காவிரி விவகாரத்தை ஜூலை மாதத்திற்கு ஒத்தி வைக்க கர்நாடக அரசு மனு அளித்தது. ஆனால் இதனை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நிராகரித்தனர். இதனையடுத்து மத்திய அரசின் வரைவுத்திட்டத்தில் 3 மாற்றங்களை சீர் செய்யக்கோரியதுடன், வழக்கின் மீதான விசாரணையை இன்று ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். 
 
இந்நிலையில், காவிரி அமைப்புக்கு ஆணையம் என பெயர் மாற்றி வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. இந்த திருத்தப்பட்ட வரைவுத் தீட்டம் மீதான வழக்கில் தீர்ப்பு நாளை வழங்கப்படும். ஒருவேளை நாளை வழங்கப்படாமல் போனால், வருகிற 22, 23ம் தேதிகளில் தீர்ப்பு வழங்கப்படும் என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
 
அதேபோல், காவிரி விவகாரத்தில் மத்திய அரசே இறுதி முடிவெடுக்கும் என்கிற அம்சம் தற்போது திருத்தப்பட்டு, அந்த அதிகாரம் ஆணையத்திற்கு நீதிமன்றம் வழங்கியுள்ளது. பிரச்சனை ஏற்பட்டால் அதை சரி செய்யு அதிகாரம் ஆணையத்திற்கே உள்ளது. நீர் திறக்காவிட்டாலும், தாமதப்படுத்தினாலும் ஆணையமே நடவடிக்கை எடுக்கலாம். மாநிலங்கள் ஒத்துழைக்காவிடால் மட்டுமே மத்திய அரசின் உதவியை நாடலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.