வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2023 (18:51 IST)

சந்திரயான் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு சக விஞ்ஞானிகள் பாராட்டு

isro
சமீபத்தில் சந்திரயான் – 3 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பிய நிலையில், விக்ரம் லேண்டர் தரையிறங்குவதற்காக வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது.

இன்று மாலை  விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது குறித்த நேரலை ஒளிபரப்பு 5.44 மணி முதல்  தொடங்க உள்ளதாக இஸ்ரோ அறிவித்தது. அதேபோல், சந்திராயான் 3 லேண்டரை நிலவில் தரையிறக்கும் செயல்முறையில் இஸ்ரோ வெற்றிகரமாகச் செயல்பட்டு,  விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்கிச் சாதனை படைத்தது.

இதற்கு பிரதமர் மோடி, ‘’இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் எனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறிய பிரதமர் மோடி இந்தியா இப்போது நிலவில் இருக்கிறது’’ என்று தெரிவித்தார். 

சந்திரயான் 3 வெற்றிக்கு  இந்திய அரசியல் தலைவர்கள், மாநில முதல்வர் அமைச்சர்கள், பிரபலங்கள், மக்கள் உள்ளிட்ட பலரும் இஸ்ரோவுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.

நிலவின் தெந்துருவத்தில் தடம் பதித்த  முதல் நாடு இந்தியா என்ற சாதனை படைத்துள்ள நிலையில், ஒட்டுமொத்த இந்தியர்களும் இந்த சரித்திர நிகழ்வை கொண்டாடி வருகின்றனர். எனவே  சந்திரயான் -3 திட்ட இயக்குனர் வீரமுத்துவேலுக்கு சக விஞ்ஞானிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.