வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva

ஆதார் அட்டையை இணைக்காத விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடையாதா? அதிர்ச்சி தகவல்!

farmers
ஆதார் அட்டையை இணைக்க விவசாயிகளுக்கு உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மத்திய அரசின் பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் ஆதார் எண்ணை இணைக்காத சுமார் 9 லட்சம் விவசாயிகள் ரூபாய் 6000 உதவித்தொகை கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
 
ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே உதவித்தொகை விவசாயிகளுக்கு கிடைக்கும் என வேளாண் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதை அடுத்து இதுவரை ஆதார் எண் இணைக்க விவசாயிகள் உடனடியாக இணைக்கும்படி வலியுறுத்தப்பட்டு வருகின்றனர். 
 
Edited by Siva