புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 7 பிப்ரவரி 2021 (09:31 IST)

எங்கேயும் போக மாட்டோம்.. அக்டோபர் வரை இங்கதான்! – டெல்லி விவசாயிகள் உறுதி!

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் அக்டோபர் வரை போராட்டம் நடத்த போவதாக அறிவித்துள்ளனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 74 நாட்களாக விவசாய அமைப்புகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றன. மத்திய அரசுடன் 11 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் சமரசம் ஏற்படாததால் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் வேளாண் சட்டங்களை திரும்ப பெற்று குறைந்த பட்ச ஆதாரவிலை உத்தரவாதம் அளிக்க அக்டோபர் வரை மத்திய அரசுக்கு அவகாசம் அளித்திருப்பதாகவும் அதுவரை தொடர்ந்து டெல்லி எல்லைகளில் போராட்டம் நடக்கும் என்றும், அக்டோபரில் அரசு உரிய அறிவிப்பை வெளியிடாத பட்சத்தில் நாடு முழுவதும் போராட்டம் நடைபெறும் என விவசாயிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.