பிரபல மாடல் அழகி மர்ம சாவு; அழுகிய நிலையில் கண்டெடுப்பு

Sasikala| Last Updated: செவ்வாய், 13 ஜூன் 2017 (11:26 IST)
பிரபல மாடலாக இருந்து வந்தவர் கிரித்திகா சவுத்ரி, ஒரு சில சீரியலிலும், படங்களிலும் நடித்துள்ளார். இவர் மும்பையில் அந்தேரி பகுதியில் தங்கி வந்துள்ளார். இவரின் வீடு மூன்று நாட்கள் ஆகியும் பூட்டியப்படியே இருந்துள்ளது, மேலும், வீட்டை சுற்றி துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது.

 
அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உடனே போலீஸிக்கு தகவல் சொல்ல, அவர்கள் வந்து வீட்டிற்குள் சென்று பார்க்க அங்கு கிரித்திகாவின் உடல் அழுகிய நிலையில் இறந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் இச்சம்பவம் அப்பகுதில் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. மேலும் இவர் இறந்து 3 நாட்கள் ஆகியிருக்கும் என கூறப்படுகிறது.
 
இவர் கொலை செய்யப்பட்டாரா? இல்லை தற்கொலை செய்துக்கொண்டாரா? என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி  வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :