வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: வியாழன், 22 ஜூன் 2017 (04:35 IST)

உ,பி, மபி, பஞ்சாபை அடுத்து கர்நாடாகாவிலும் விவசாய கடன் ரத்து

தமிழகம் உள்பட இந்தியா முழுவதிலும் விவசாயிகளின் கடனை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயிகளின் சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. வரலாறு காணாத பஞ்சத்தின் காரணமாக வலியுறுத்தி வரும் விவசாயிகளின் கோரிக்கைகளை உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஏற்று கடன்களை ரத்து செய்துள்ளது.



 


இந்த நிலையில் கர்நாடகா மாநில முதல்வர் சித்தராமையா, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தொகையில், 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி செய்து, உத்தரவிட்டுள்ளார். இதன் மூலம், 22 லட்சம் விவசாயிகள் பலனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது

இதுகுறித்து முதல்வர் சித்தராமையா செய்தியாளர்களிடம் கூறியபோது, 'கடும் வறட்சியால், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகள் நலனில் மாநில அரசு மிகுந்த அக்கறை வைத்துள்ளது. விவசாயிகள் நலன் கருதி, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன் தொகையில், ஒவ்வொரு விவசாயியின் கடன் தொகையிலிருந்தும், தலா, 50 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும். இதன் மூலம், 22 லட்சத்து, 27 ஆயிரத்து 506 விவசாயிகள் பலன் அடைவர். இந்த கடன் தள்ளுபடியின் மூலம், மாநில அரசுக்கு, 8,165 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும். எனினும், விவசாயிகள் நலன் கருதி, மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.