குஜராத்தில் 5 ஆண்டுகளாக இயங்கிய போலி நீதிமன்றம்.. போலி நீதிபதி கைது!
குஜராத் மாநிலத்தில் 50 ஆண்டுகளாக போலி நீதிமன்றம் நடத்திய போலி நீதிபதி கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தில் பாபுஜி என்பவர் 50 ஆண்டுகளாக ஒரு இடத்தில் குடியிருப்பதால், அந்த இடத்தை தனது பெயருக்கு மாற்றி தரவேண்டும் என்று கோரிக்கை விடுத்து, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
மனுதாரர் பாபுஜியிடம் இருந்து பெரும் தொகையை பெற்றுக் கொண்ட போலி நீதிபதி சாமுவேல், பாபுஜிக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதாக தெரிகிறது. இந்த தீர்ப்பை அகமதாபாத் ஆட்சியரிடம் பாபுஜி வழங்கிய நிலையில், அதன் மீது ஆட்சியர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில், போலி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நகலை அகமதாபாத் உரிமையியல் நீதிமன்றத்தில் பாபுஜி மனு தாக்கல் செய்தார். அந்த தீர்ப்பு நகலை பார்த்து சந்தேகம் அடைந்த நீதிமன்ற பதிவாளர் போலீசில் புகார் அளித்த நிலையில், போலீசார் நடத்திய விசாரணையில் அது போலி நீதிமன்றம் என்றும் தீர்ப்பளித்தவர் போலி நீதிபதி என்றும் தெரியவந்ததை அடுத்து, நீதிபதி சாமுவேல் கைது செய்யப்பட்டார்.
50 ஆண்டுகளாக ஒரு போலி நீதிமன்றத்தை நடத்தியதை கண்டுபிடிக்க முடியாமல் குஜராத் போலீசும், அரசு அதிகாரிகளும் இருந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edited by Siva