Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஏடிஎம் மிஷினில் டூப்ளிகேட் நோட்டுக்கள். உபியில் அதிர்ச்சி சம்பவம்

Last Modified ஞாயிறு, 11 பிப்ரவரி 2018 (23:09 IST)
சிறுவர்கள் விளையாடும் பொம்மை நோட்டுக்கள் உபி மாநிலத்தில் உள்ள ஒரு ஏடிஎம் மிஷினில் கத்தை கத்தையாக வந்ததால் அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநில தலைநகர் கான்பூர் அருகே உள்ள ஆக்ஸிஸ் வங்கியின் ஏடிஎம் மிஷினில் வழக்கம்போல் இன்று வாடிக்கையாளர்கள் சிலர்
பணம் எடுக்க வந்துள்ளனர். அப்போது, ஏடிஎம் மிஷினில் இருந்து குழந்தைகள் விளையாடும் போலியான பொம்மை 500 ரூபாய் நோட்டுகள் வந்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து உடனடியாக வாடிக்கையாளர்கள் போலீஸில் புகார் அளித்தனர். இதனையடுத்து வங்கி நிர்வாகம் உடனடியாக விசாரணை செய்து இந்த சம்பவம் குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாது என்றூ கைவிரித்ததால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுவிட்டனர். போலியான பொம்மை நோட்டுக்களுக்கும் தங்களுடைய வங்கிக்கணக்கில் இருந்து பணம் கழிந்துள்ளதால் வாடிக்கையாளர்களுக்கு இந்த அதிர்ச்சி. இந்த நிலையில் இது பற்றி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், தற்போதைக்கு போலியான பொம்மை நோட்டுகளை வழங்கிய ஏடிஎம் மூடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :