1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 27 மார்ச் 2021 (08:46 IST)

எக்ஸ்பயர் ஆன லைசென்ஸை தாராளமா பயன்படுத்தலாம்:எப்ப வரை தெரியுமா?

காலாவதியாகும் ஓட்டுநர் உரிமம் ஜூன் 30 ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு மார்ச் வரை செல்லுபடியாகும் என மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.   

 
இந்தியாவில் கடந்த மார்ச் மாத துவக்கத்திலேயே கொரோனா பரவத் துவங்கியதால் ஊரடங்கு போடப்பட்டது. நாடே முடங்கிய நிலையில் மத்திய, மாநில அரசுகளின் அலுவல் பணிகளும் முழுமையாக முடங்கின. இந்நிலையில் தற்போது ஊரடங்கில் தளர்வுகள் வழங்கபட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது.  இருப்பினும் தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதால் மீண்டு ஊரடங்கு அமலுக்கு வ்ரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. 
 
வரும் 31 ஆம் தேதி முடிவடையுள்ள மற்றும் கடந்த ஆண்டு பிப்ரவரி ஒன்றாம் தேதியுடன் முடிந்த, வாகனங்களுக்கான அனுமதி, ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவு ஆகியவற்றுக்கு ஜூன் 30 ஆம் தேதி வரை கால அவகாசம் அளிக்கும் படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பெருந்தொற்று ஏற்பட்டதிலிருந்து நான்காவது முறையாக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.