1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 29 ஆகஸ்ட் 2023 (08:27 IST)

100 சதவீதம் எத்தனாலில் இயங்கும் கார்: இன்று அறிமுகம் செய்கிறார் மத்திய அமைச்சர்..!

பெட்ரோல் டீசல் கார்களுக்கு மாற்றாக 100% எத்தனாலில் இயங்கும் கார் குறித்த தகவல்கள் கடந்த சில நாட்களாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இன்று முதல் மத்திய அமைச்சர் இந்த காரை அறிமுகம் செய்து வைக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
பெட்ரோல் டீசல் இல்லாமல் 100% எத்தனாலில் இயங்கும் டொயோட்டா இன்னோவா காரை இன்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்த உள்ளார். 
 
சுற்றுச்சூழல் மாசுபாட்டை தடுக்கும் வகையில் இந்த கார் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அதிக புகையை கக்கும் வாகனங்களை மத்திய அரசு படிப்படியாக கட்டுப்படுத்தி வரும் நிலையில் எதிர்காலத்தில் இந்த கார் அதிக அளவில் பயன்படுத்த வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
 கடந்த ஆண்டு ஹைட்ரஜனில் இயங்கும் காரை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்திய நிலையில் தற்போது எத்தனால் காரை அறிமுகப்படுத்த உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva