செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 22 மே 2022 (15:47 IST)

பொறியியல் படிப்புகளுக்கு உயர்கிறது கட்டணம்! – ஏஐசிடிஇ அறிவிப்பு!

பொறியியல் படிப்புக்கான தகுதியில் திடீர் மாற்றம்
நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் பொறியியல் படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாக ஏஐசிடிஇ அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல பொறியியல் கல்லூரிகளில் பல்வேறு பொறியியல் சார்ந்த படிப்புக்களும் உள்ள நிலையில் அந்த படிப்புகளுக்கான கல்வி கட்டணத்தை ஏஐசிடிஇ நிர்ணயித்து வருகிறது.

இந்நிலையில் தற்போது B.E., B.Tech, B.Arch ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி குறைந்தபட்சம் ஒரு செமஸ்டருக்கு கட்டணம் ரூ.79,600 ஆகவும், அதிகபட்சம் ரூ.1,89,800 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதுபோல நாடு முழுவதும் டிப்ளமோ பொறியியல் படிப்புகளுக்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.