1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (17:06 IST)

ரெப்போ வட்டி விகித உயர்வால் இ.எம்.ஐ கடன் வாங்கியவர்கள் அதிர்ச்சி!

loan
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தை 0.50 சதவீதம் அதிகரித்தது என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம் 
 
இந்த நிலையில் ரெப்போ வட்டி விகித உயர்வு காரணமாக தவணை முறையில் கடன் வாங்கியவர்கள் திண்டாட்டம் அடைவார்கள் என்று கூறப்படுகிறது 
 
வட்டி விகிதம் 5.40 சதவீதத்திலிருந்து 5.90 என உயர்த்தப்படுவதாக இந்திய ரிசர்வ் வங்கி இன்று காலை தெரிவித்தது. இதன் காரணமாக வீட்டு லோன் கார் லோன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் உயரும் என்றும் அதன் காரணமாக மாதத் தவணைக் கட்டணம் உயரும் என்றும் கூறப்படுகிறது
 
ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள்தான் இந்த லோன்களை வாங்கி இருப்பார்கள் என்பதால் அவர்களுக்கு இது கூடுதல் சுமை என்பது குறிப்பிடத்தக்கது 
 
உலக அளவில் ஏற்படும் பொருளாதார நெருக்கடி காரணமாக வட்டி விகித உயர்வு தடுக்க முடியாதது என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது