வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 14 டிசம்பர் 2016 (17:32 IST)

ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தடை: தேர்தல் ஆணையம் வலியுறுத்தல்

தேர்தலில் ஒரே வேட்பாளர் இரண்டு தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்குமாறு மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தி உள்ளது.


 

 
தேர்தல் மறுசீரமைப்பு தொடர்பாக நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான ஆணையம் தேர்தல் விதிமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை மத்திய அரசின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்துள்ளது.   
 
அதில், ஒரே வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதனால் மக்கள் பணம் வீணாவதை முழுவதுமாக தவிர்க்க முடியும் என்று அறிவுறுத்தி உள்ளது.
 
குறிப்பாக வேட்பாளர் வெற்றி பெற்று அவர் ஒரு தொகுதியை ராஜினாமா செய்யும் போது, வேட்பாளரை நம்பி வாக்களித்த வாக்காளர்களின் நம்பிக்கை கெடுக்கும் வகையில் அமையும் என்றும் சுட்டிக்காட்டி கூறப்பட்டுள்ளது.