புதன், 4 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : புதன், 1 ஜூன் 2016 (11:52 IST)

8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரன் : அதிர்ச்சி வீடியோ

பாலியல் பலாத்காரம் செய்வதற்காக, டெல்லிக்கு அருகே 8 வயது சிறுமியை ஒரு காம கொடூரன் தூக்கிச் செல்லும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 

 
டெல்லிக்கு அருகே உள்ள கிராடி எனும் கிராமத்தில் வசிக்கும் ஒரு 8 வயது சிறுமி, கடந்த 28ஆம் தேதி தனது சகோதரனுடன் உறங்கி கொண்டிருந்தாள். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம நபர், அந்த சிறுமியின் வாயை பொத்தி தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்தான். 
பின்னர், சிறுமியை அங்கேயே விட்டு விட்டு ஓடி விட்டான். உடல் நிலை மோசமான நிலையில் அந்த சிறுமி மீட்கப்பட்டு, தற்போது மருத்துவமனையில் அவளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இதுபற்றி பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதையடுத்து, வழக்குப்பதிவு போலிசார், அந்த மர்ம நபரை தேடி வந்தனர். 
 
இந்நிலையில், அந்த காம கொடூரன் சிறுமியை வாய் பொத்தி தூக்கி செல்லும் நிகழ்வு அந்த தெருவில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அதன் மூலம் அந்த நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளான்.
 
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் பலாத்காரம் கொடூரம் தலைநகர் டெல்லியில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.  எனவே கடுமையான சட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே இதற்கு ஒரு விடை காண முடியும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
 

Courtesy - India Today