1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 27 பிப்ரவரி 2024 (15:02 IST)

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 8-வது முறையாக ED சம்மன்.! மார்ச் 4-ல் நேரில் ஆஜராக உத்தரவு..!!

kerjiwal
மதுபான கொள்கை ஊழல் வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 8-வது முறையாக  சம்மன்  அனுப்பியுள்ளது. மார்ச் நான்காம் தேதி நேரில் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.
 
டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி கடந்த 2021ஆம் ஆண்டில் புதிய மதுபான கொள்கையைக் கொண்டு வந்தது. இதன் மூலம் டெல்லியில் தனியாரும் உரிமம் பெற்று மதுபானங்களை விற்கலாம் என்று முடிவு எடுக்கப்பட்டது.
 
இதில் ரூ2,800 கோடி ரூபாய் அளவிற்கு ஊழல் நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த வழக்கில் டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா, ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங் எம்.பி உள்ளிட்ட பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 
மேலும் இந்த வழக்கில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த அமலாக்கத் துறை முடிவு செய்துள்ளது. இதனால் அவருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு ஆஜராகும்படி அமலாக்கத்துறை கேட்டுக்கொண்டது. இதுவரை 6 முறை சம்மன் அனுப்பியும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
 
இதையடுத்து அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 7 வது முறையாக நேற்று ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை.

 
இந்நிலையில் மார்ச்-4ம் தேதி விசாரணைக்கு  நேரில் ஆஜராகும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு  8-வது முறையாக அமலாக்கத்துறை இன்று சம்மன் அனுப்பி உள்ளது.