வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (07:15 IST)

சபரிமலை குறித்து பேசினால் வேட்பாளர் தகுதிநீக்கம்: தேர்தல் ஆணையம் அதிரடி

கடந்த ஆண்டு சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பு ஒன்றில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உத்தரவிட்டது. இந்த விவகாரம், ஐயப்ப பக்தர்களை விட அரசியல் கட்சியால் பெரிதுபடுத்தப்பட்டது. அனைத்து அரசியல் கட்சிகளும் இதனை ஒரு சமூக பிரச்சனையாக பார்க்காமல் அரசியல்ரீதியாக லாபம் பெற முயற்சித்து போராட்டங்களை நடத்தின
 
இந்த நிலையில் வரும் பாராளுமன்ற தேர்தலின்போது தேர்தல் பிரச்சாரத்தில் சபரிமலை விவகாரத்தைப் பயன்படுத்தினால், வேட்பாளர் தகுதிநீக்கம் செய்யப் பரிந்துரை செய்யப்படுவார் என கேரள மாநிலத் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி டி.ஆர்.மீனா அதிரடியாக அறிவித்துள்ளார். 
 
சபரிமலை விவகாரத்தை ஒரு  குறிப்பிட்ட மத விவகாரமாக மாற்றி அரசியல் லாபம் தேட எந்த அரசியல் கட்சியும் முயற்சிக்க கூடாது என்றும், மத வெறுப்புகளைத் தூண்டுவது, இந்துகளுக்கு ஆதரவான அல்லது எதிரான உணர்வுகளை அடிப்படையாகக் கொண்டு பிரச்சாரம் செய்வது போன்ற செயல்களில் ஈடுபடும் வேட்பாளர்கள், தேர்தலில் போட்டியிடும் தகுதியை இழக்க நேரிடும் என்றும் கேரள மாநிலத் தலைமை தேர்தல் ஆணைய அதிகாரி டி.ஆர்.மீனா மேலும் கூறியுள்ளார்.
 
சபரிமலை விவகாரத்தை கையிலெடுத்து பிரச்சாரம் செய்ய முடிவு செய்திருந்த அரசியல்வாதிகள் இந்த அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.