Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

குஜராத்தில் நிலநடுக்கம்; 4.5 ரிக்டர் பதிவு


Abimukatheesh| Last Updated: திங்கள், 13 மார்ச் 2017 (19:51 IST)
குஜராத் மாநிலத்தில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.5 ஆக பதிவாகியுள்ளது.

 

 
குஜராத் மாநிலம் தொடர்ந்து நிலநடுக்கத்தை எதிர்கொண்டு வருகிறது. கடந்த 3 மாதங்களில் 70 முறை நிலநடுக்க அதிர்வுகள் உணரப்பட்டிருக்கின்றன. 2001ஆம் ஆண்டு குஜாராத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் நாட்டையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. 
 
இந்நிலையில் இன்று குஜராத் மாநிலம் பனஸ்கந்தாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் 4.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :