Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

டிரம்ப் கையெழுத்தால் இந்திய ஐடி ஊழியர்கள் வேலை இழக்கும் அபாயம்

Last Modified: வியாழன், 20 ஏப்ரல் 2017 (16:15 IST)

Widgets Magazine

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்-1பி விசா விதிமுறையில் மாற்றங்களை கொண்டு வந்ததால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  


 

 
டொனால்டு டிரம்ப் அமெரிக்காவின் அதிரபாக பதவியேற்றவுடன் பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்தார். அதில் முக்கியாமான ஒன்று, அமெரிக்கா குடிமக்களை அனைத்து துறைகளிலும் பணியில் அமர்த்துவது. 
 
இதற்காக எச்-1பி விசா விதிமுறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டு வரப்பட்டது. இந்திய ஐடி நிறுவனங்கள், எச்-1பி விசா மூலம் இந்திய பொறியாளர்களை அமெரிக்காவிற்கு அனுப்பி குறைந்த செலவில் அதிகளவிலான லாபத்தைப் பெற்று வந்தது. இந்திய ஐடி சந்தைக்கு மிகமுக்கியமான வர்த்தகத் தளம் அமெரிக்கா.
 
தற்போது எச்-1பி விசா பெறும் ஒருவரின் அடிப்படை சம்பளம் குறைந்தபட்சம் 1,30,000 அமெரிக்க டாலராக இருக்க வேண்டும். இந்த விசா பிரச்சனையில் இருந்து விடுப்பட இந்திய ஐடி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது அமெரிக்க மக்களையும், அமெரிக்க கல்லூரிகளில் இருந்து வெளிவரும் மாணவர்களையும் பணியில் அமர்த்தும் திட்டத்தை கையில் எடுத்துள்ளது.
 
இதனால் இந்திய ஐடி நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களை காத்துக்கொண்டாலும், லாபத்தை இழக்கும். இதனால் பல ஊழியர்களின் வேலைவாய்ப்பு பறிபோகும் நிலை உருவாகியுள்ளது.
 
இந்நிலையில் விசா கட்டுப்பாடுகள் குறித்து நாஸ்காம் மற்றும் மத்திய அரசு தொடர்ந்து அமெரிக்க அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
இதில் மேலும் படிக்கவும் :
news

அவர்கள் வேண்டாம் ; கே.பி. முனுசாமி போர்க்கொடி ; இரு அணிகள் சேர்வதில் சிக்கல்

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அணியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதை அதிமுக தொண்டர்கள் ...

news

காறி துப்பினாலும் துடைக்க தயாராக இருக்கும் நாஞ்சில் சம்பத் (வீடியோ இணைப்பு)

டிடிவி தினகரனை பற்றி பேசுவதால் என்னை வெளியில் காறி துப்பினாலும் அதை துடைத்துக்கொள்வேன் என ...

news

இணையும் இரு அணிகள் ; 5 அமைச்சர்களின் பதவி கல்தா? - ஓ.பி.எஸ் அணி தீவிரம்

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்தால், தினகரனுக்கு விசுவாசமாக இருந்த 5 அமைச்சர்களின் பதவி ...

news

சசிகலா குடும்பத்தினரால் மட்டுமே கட்சியை வழிநடத்த முடியும்; சொல்வது யார் தெரியுமா?

சசிகலா, டிடிவி தினகரன் இல்லாமல் அதிமுக என்பது இல்லை என முன்னாள் எம்.பி. ஜே.கே.ரித்தீஷ் ...

Widgets Magazine Widgets Magazine