Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

மன உளைச்சல் காரணமாக நடிகை தூக்கு மாட்டி தற்கொலை!

Sasikala| Last Modified வியாழன், 9 பிப்ரவரி 2017 (10:17 IST)
வங்க மொழிப்படங்களில் நடித்து வரும் திரைப்பட நடிகை பிடாஸ்டா சஹா மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

 
மேற்கு வங்க மாநிலம் கோல்கட்டாவை சேர்ந்தவர் பிடாஸ்டா சஹா என்ற நடிகை வயது(25). வங்க மொழிப்படங்களில் நடித்து வரும் அவர் கொல்கத்தாவின் காஸ்பா பகுதியில் தனியாக ஒரு வீடு எடுத்து தங்கி இருந்தார். வெளியூரில் வசித்து வரும் அவரின் தாய் மற்றும் மகள் கடந்த 2 நாட்களாக தொடர்பு கொள்ள முயன்றனர். இருப்பினும் அவர் போனை எடுக்காததால், நேரில் கிளம்பி வந்தனர்.
 
பிடாஸ்டா சஹாவின் வீடு உள்புறமாக பூட்டியிருந்ததால் பல நிமிடங்களாக கதவை தட்டினர். பலமுறை தட்டியும் கதவு திறக்கபடவில்லை, மேலும் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதையடுத்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதையடுத்து போலீஸார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு மின் விசிறியில் பிடாஸ்டா பிணமாக தொங்குவதை பார்த்து திடுக்கிட்டனர். அவரது மணிக்கட்டில் கத்தியால் வெட்டப்பட்டு ரத்தம் உறைந்து இருந்தது. உடல் அழுகியதூக்கில் அழுகிய நிலையில் இருந்தது.
 
இதையடுத்து போலீஸார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டிடுக்கலாம் என சந்தேகிக்கப்படிகிறது.


இதில் மேலும் படிக்கவும் :