Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

பன்றியை காப்பாற்ற 11 பேரை பலி கொடுத்த பஸ் டிரைவர்


Abimukatheesh| Last Updated: சனி, 11 மார்ச் 2017 (16:56 IST)
மகாராஷ்டிரா மாநிலம் சாலையில் பன்றி குறுக்கே வந்ததால் பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

 

 
மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள கோயிலுக்கு பக்தர்கள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர். கோரிகான் என்ற இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே பன்றி வந்துள்ளது.
 
பன்றி மேல் மோதிவிட கூடாது என ஓட்டுநர் பேருந்தை வளைத்துள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த பேருந்து எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் பேருந்தில் இருந்த 11 பேர் சம்பவ இடத்திலே உயிரிழந்தனர். பலர் டுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
 
பன்றியை காப்பாற்ற 11 பேரை பலி கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :