ஜல்லிக்கட்டு மீதான தடை திமுக, காங்கிரஸ் திட்டுமிட்டு செய்த சதி: பிரகாஷ் ஜவடேகர் குற்றச்சாட்டு


Ashok| Last Modified புதன், 20 ஜனவரி 2016 (21:20 IST)
தமிழகத்தில் ஜல்லிகட்டுக்கு தடை என்பது திமுக. மற்றும் காங்கிரஸ் கட்சிகளால் திட்டமிட்டு கொண்டு வரப்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் குற்றம் சாட்டியுள்ளார்.

 
 
டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஜல்லிகட்டிற்கு தடை விதிக்க முழு காரணம் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தான் என்று பிரகாஷ் ஜவடேகர் குற்றம்சாட்டியுள்ளார்.
 
மேலும், ஜல்லிகட்டு நடத்தப்படுவதற்காக அரசாணை வெளியிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொண்டது என்றும் கடைசி நேரத்தில் உச்சநீதிமன்றம் விதித்த தடை காரணமாக தான் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெறாமல் போனது என்றும் அவர் கூறினார். 
 
 
தமிழகத்தில் பாஜக கட்சியில் இருந்து தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் நடைபெற இருக்கிற சட்டமன்றத்தேர்தல் குறித்து தமிழக பாஜக தலைவர்களுடன் இன்னும் இரண்டு நாட்களில் ஆலோசனை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்


இதில் மேலும் படிக்கவும் :