1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : புதன், 7 அக்டோபர் 2015 (17:17 IST)

அழகான மனைவியை அனுபவித்துவிட்டு நான்கு வாரத்தில் விவாகரத்து கேட்ட கணவர்

கேரளாவில் ஒருவர் தன் மனைவி ஒரு ஆப்பிள் போல் இருந்தால், நான் ஏற்கனவே அந்த ஆப்பிளை ருசிபார்த்து விட்டேன் அதனால் எனக்கு அவள் மீண்டும் வேண்டாம் என கூறி விவாகரத்து கேட்டுள்ளார்.

கேரளாவில் உள்ள மகளிர் ஆணையம் ஒன்றில் 21 வயதான பெண் ஒருவர், தன்னுடைய கணவர் அவள் ஒரு ஆப்பிள் போல் இருந்தால், நான் ஏற்கனவே அந்த ஆப்பிளை ருசிபார்த்து விட்டேன் அதனால் எனக்கு அவள் மீண்டும் வேண்டாம் என கூறி விவாகரத்து கேட்டுள்ளதாக மகளிர் ஆணையத்தில் அதிர்ச்சியளிக்கும் புகாரை அளித்துள்ளார்.

திருமணமான 4 வாரத்தில் அவரது கணவரிடமிருந்து மூன்று முறை விவாகரத்துக்கான தலாக் செய்தியை வாட்ஸ் அப்பில் அந்த பெண் பெற்றுள்ளார். அவரது கணவர் திருமணமான பத்து நாட்களில் துபாய் சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது

துபாயில் இருக்கும் அவர் அனுப்பிய அந்த வாட்ஸ் அப் செய்திகளை வைத்து அவரது மனைவி கோட்டயத்தில் உள்ள பெண்கள் ஆணைய உறுப்பினர் பிரமிளா தேவியிடம் புகார் அளித்துள்ளார்.

இந்த ஆணையம் வாட்ஸ் அப் விவாகரத்து செல்லுபடியாகுமா என கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் அவரது பெற்றோரை விசாரனைக்கு அழைத்துள்ளனர்.

இதற்கிடையில் வாட்ஸ் அப் மூலம் தலாக் அதாவது விவாகரத்து பெறும் வசதி உள்ளதாக இஸ்லாமிய அறிஞர்கள் கூறுகின்றனர். சமஸ்தா கேரள ஜாம் இய்யதுல் உலமா வை சேர்ந்த ஒரு உறுப்பினர் இரண்டு பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தி இந்த விவாகரத்து செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளார்.