ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 25 ஆகஸ்ட் 2023 (20:44 IST)

கோயில் உண்டியலில் ரூ.100 கோடி காசோலை செலுத்திய பக்தர்...அதிகாரிகள் அதிர்ச்சி

appanna varaha lakshmi andra
ஆந்திர மாநிலத்தில் உள்ள  நரசிம்ம சுவாமி கோயிலுக்கு  ரூ.100 கோடிக்கான கோசோலையை பக்தர் ஒருவர் செலுத்திய  நிலையில் அதில் பணமெடுக்க சென்ற அதிகாரிகளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

ஆந்திர மாநிலத்தில் முதல்வர்  ஜெகன் மோகன்  ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது.

இங்குள்ள அப்பண்ணா வராக லட்சுமி நரசிம்ம கோயில் பிரசித்தமானது. இந்த கோயிலுக்கு ஏராளளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த  நிலையில்,  நரசிம்ம சுவாமி கோயில் உண்டியலில்  ரூ.100 கோடிக்கான காசோலை இருந்துள்ளது.

இதைக் கண்ட அதிகாரிகள் அதைக் கொண்டு பண எடுக்கச் சென்றால் ரூ.17 இருப்புத் தொகையுடன் இருந்த வங்கிக் கணக்கைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து விசாரிக்கையில்,  அந்த பக்தர் போடேபள்ளி கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணா என்பது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.