1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 அக்டோபர் 2018 (12:17 IST)

செல்பி சர்ச்சையில் சிக்கிய முதலமைச்சரின் மனைவி

மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மனைவி, கப்பலில் ஆபத்தான முறையில் செல்பி எடுத்த விவகாரம் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
 
மும்பை கடல் பகுதியில் சொகுசு கப்பல் போக்குவரத்தை மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் மற்றும் மத்திய சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அந்த நிகழ்ச்சிக்கு தேவேந்திர பட்னவிஸ் மனைவி அம்ருதா வருகை தந்திருந்தார்.
 
அப்போது கப்பலை பார்த்ததும், பரவசமடைந்த அம்ருதா கப்பலை சுற்றி சுற்றி செல்பி எடுத்தார். ஒரு கட்டத்தில் கப்பலின் ஆபத்தான பகுதிக்கு சென்று செல்பி எடுத்தார். இதனை தடுத்த அதிகாரிகளையும் அம்ருதா கண்டுகொள்ளவில்லை என கூறப்படுகிறது. இந்த காட்சியானது சமூக வலைதளங்களில் பரவி, இவ்வாறு பொறுப்பற்று நடந்துகொள்ளலாமா என பலர் அவரை கேள்வி எழுப்பி வருகின்றனர்.