1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : சனி, 16 ஜனவரி 2016 (14:45 IST)

ஆந்திராவில் ஜல்லிக்கட்டு: தடையை மீறிய சித்தூர் மக்கள்

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழாவில் நடைபெறும் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்தும், தமிழக எல்லையில் உள்ள ஆந்திரபிரேதசத்தில் குறிப்பாக சித்தூரில் உச்சநீதிமன்ற தடையை மீறி ஜல்லிக்கட்டை நடத்தியுள்ளனர். சங்ராந்திக்கு அடுத்த நாளான கனும நாள் இந்த ஜல்லிக்கட்டை சித்தூரில் நடத்தியுள்ளனர்.


 
 
தமிழ்நாடு ஜல்லிக்கட்டு மற்றும் சித்தூர் ஜல்லிக்கட்டுக்கும் உள்ள ஒரே வேறுபாடு, மக்கள் இரு புறங்களிலும் சுற்றி நிற்க 50 மாடுகளை ஓடவிடுவர். மாடுகளின் கொம்புகள் விசித்திரமான பொறிகளால் அலங்கரிக்கப்பட்டு ஓடவிடப்படும். மக்கள் அந்த கூட்டத்தில் அதை பிடிக்க முயல்வர், சில நேரங்களில் மக்கள் காயமடைய நேரிடும். காயங்களுக்கு சிகிச்சையளிக்க ஆம்புலன்ஸ் அருகிலேயே இருக்கும்.
 
இந்த ஆண்டு சந்த்ரகிரி மண்டலத்தின் புல்லயாகரிபேட்டையில் நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு விழாவில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மாமா நன்டமுரி பாலகிருஷ்ணா கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவித்து, தமிழக முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. ஆனால் ஆந்திர முதல்வரின் உறவினர்களே உச்சநீதிமன்ற உத்தரவை மீறி ஜல்லிக்கட்டில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.