செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 19 ஏப்ரல் 2021 (12:02 IST)

மாஸ்க் போடாமல் வந்ததுடன் போலீஸை கேவலமாக பேசிய தம்பதி! – அபராதம் விதித்து நடவடிக்கை!

டெல்லியில் ஊரடங்கு விதிகளை மீறியதுன் காவலர்களிடம் கேவலமாக பேசிய தம்பதியினருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வரும் நிலையில் மாநில அளவில் தலைநகர் டெல்லியில் தினசரி பாதிப்புகள் அதிக அளவில் உள்ளன. இந்நிலையில் டெல்லியில் வார இறுதி மற்றும் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டுள்ளதுடன் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் உள்ளிட்டவை கடுமையாக பின்பற்றப்படுகின்றன.

இந்நிலையில் டெல்லியில் பங்கஜ் தத்தா மற்றும் அவரது மனைவி அபா ஆகியோர் மாஸ்க் அணியாமல் காரில் சென்றுள்ளனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீஸார் மாஸ்க் அணிய சொல்லி வலியுறுத்தியதுடன், மாஸ்க் அணியாமல் வந்ததற்கு அபராதம் விதித்துள்ளனர். இதற்கு ஆத்திரமைடைந்த அபா காவலர்களை கொச்சையான வார்த்தைகளில் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் காவலர்களிடம் அவதூறாக நடந்து கொண்டதற்காக தம்பதிகளுக்கு மேலும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.