1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 3 மார்ச் 2015 (13:46 IST)

பாலியல் பலாத்காரத்திற்குப் பெண்கள்தான் பெறுப்பு: டெல்லி பாலியல் பலாத்கார குற்றவாளி முகேஷ் சிங்

பாலியல் பலாத்காரத்திற்கு பெண்களின் தவறான நடத்தையே காரணம் என்று, டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளில் ஒருவரான, முகேஷ் சிங் ஆவணப்படம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் டெல்லியில் நடைபெற்ற பாலியல் பலாத்கார சம்பவம் தொடர்பாக லெஸ்லீ அட்வின் என்பவர் 'India’s Daughter'  (இந்தியாவின் மகள்) என்ற ஆவணப்படத்தைத் தாயாரித்தார்.
 
அப்போது, பாலியல் பலாத்கார வழக்கில் கைதானவர்களில் ஒருவரும் மரண தண்டனை விதிக்கப்பட்டவருமான முகேஷ் சிங் என்பவர் சிறையில் இருந்தபடியே இந்த ஆவணப்படத்திற்காக பேட்டியளிததார்.
 
முகேஷ் கூறியுள்ள அந்த கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 
அந்த பேட்டியில் முகேஷ் சிங் கூறியிருப்பதாவது:-
 
"ஒரு ஒழுக்கமான பெண் இரவு 9 மணிக்கு மேல் வெளியே சுற்றக் கூடாது. பாலியல் பலாத்காரத்திற்கு அதிக பொறுப்புடையவர்கள் பெண்கள்தான். வீட்டு பணிகளை செய்வதுதான் பெண்களின் கடமை.
 
பார்களுக்கும் திஸ்கோக்களுக்கும் செல்வது அல்ல. என்றும், முன்பெல்லாம் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படும் பெண்கள் யாரிடமும் அதை பகிர்ந்துகொள்ள மாட்டார்கள் என்று எண்ணி அப்பெண்களை அந்த ஆண்கள் விட்டுவிடுவார்கள். ஆனால் இனி அவ்வாறு நடக்காது என்றும் அந்த பேட்டியில் டெல்லி பாலியல் பலாத்கார சம்பவத்தின் குற்றவாளியான முகேஷ் கூறியுள்ளார்.
 
கடந்த 2012 ஆம் ஆண்டு டிசம்பர் 16 ஆம் தேதி, நிர்பயா என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் பிஸியோதெரபி மாணவி  டெல்லியில் தனது நண்பருடன் திரைப்படம் பார்த்துவிட்டு இரவு வீடு திரும்பியபோது, அவர் ஓடும் பேருந்தில், ஒரு கும்பலால் கற்பழிக்கப்பட்டதுடன் கொடூரமாக தாக்கி சாலையோரம் வீசப்பட்டார். உடன் சென்ற நண்பரும் கடும் தாக்குதலுக்கு உள்ளானார்.
 
உயிருக்குப் போராடிய அந்த மாணவி செயற்கைச்சுவாச உதவியுடன் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மிகவும் மோசமான நிலையில் டிசம்பர் 26 அன்று சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.
 
அங்கு சிகிச்சை பலனளிக்காத நிலையில், 13 நாட்களுக்குப் பின்னர் டிசம்பர் 29 ஆம் தேதியன்று அந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்தார்.
 
நாடெங்கும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த கொடூர சம்பவத்திற்கு காரணமான பேருந்து ஓட்டுநர் ராம் சிங், அவரது சகோதரர் முகேஷ் சிங், வினய்ஷர்மா, பவன்குப்தா, அக்சய் குமார் சிங் மற்றும் ஒரு சிறுவன் உட்பட 6 பேரும் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டனர்.
 
நீதிமன்றத்தில் அந்த சிறுவனுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ராம் சிங் சிறையிலேயே தூக்கிலிட்டுக்கொண்டர். மற்ற நால்வருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.