டெல்லி கலவரம்… பாஜகவினரை விமர்சித்த நீதிபதி – உடனடியாக டிரான்ஸ்பர் !
டெல்லி கலவரத்தில் போலிஸார் தங்கள் பணியை செய்ய தவறிவிட்டதாக சொல்லிய நீதிபதி பணியிடமாற்றம் செய்யப்ப்ட்டுள்ளது அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.
டெல்லியில் குடியுரிமைத் திருத்த சட்டத்துக்கு எதிராகவும் ஆதரவாகவும் இருப்பவர்கள் மத்தியில் எழுந்த கலவரத்தில் இதுவரை 21 பேருக்கு மேல் இறந்துள்ளனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இது தொடர்பான வழக்கில் டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர் பாஜக தலைவர்களையும் டெல்லி போலீஸாரையும் கடுமையாக விமர்சனம் செய்தார்.
வன்முறை குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த கபில் மிஸ்ரா உள்ளிட்டோர் மீது காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன் என அவர் கேள்வி எழுப்பினார். இந்நிலையில் அவர் திடீரென டெல்லி நீதிமன்றத்தில் இருந்து பஞ்சாப் மற்றும் ஹரியானா நீதிமன்றத்துக்கு மாற்றப்படுவதாக அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பானது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜகவின் அரசு நீதித்துறைக்குள்ளும் தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.