புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 17 ஏப்ரல் 2022 (12:30 IST)

டெல்லியில் தீ பிடித்த பிரபல திரையரங்கம்..! – தீயணைப்பு பணிகள் தீவிரம்!

Uphaar Theatre
டெல்லி க்ரீன் பார்க் பகுதியில் உள்ள பிரபல திரையரங்கம் தீப்பித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி க்ரீன் பார்க் பகுதியில் பழமைவாய்ந்த பிரபலமான திரையரங்கம் உப்ஹார். கடந்த 1997ல் இந்த உப்ஹார் தியேட்டரில் ஏற்பட்ட தீ விபத்தால் 59 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். அதற்கு பின்னர் நீண்ட நாட்கள் கழித்து புணரமைக்கப்பட்டு மீண்டும் இந்த திரையரங்கம் இயங்கி வந்தது.

இந்நிலையில் இன்று காலை இந்த தியேட்டரில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைத்து நிலமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். மேலும் இந்த தீ விபத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.