1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : சனி, 10 அக்டோபர் 2015 (02:20 IST)

ஊழல் புகாரில் சிக்கிய டெல்லி மாநில அமைச்சர் டிஸ்மிஸ்

ஊழல் புகாரில் சிக்கிய டெல்லி மாநில உணவுத்துறை அமைச்சர் ஆசிம் அகமதுகான் அமைச்சர் பதவியில் இருந்து தூக்கியெறிப்பட்டார்.
 

 
இது குறித்து, ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி மாநில முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் செய்தியாளர்களிடம்  கூறியதாவது:-
 
டெல்லி மாநிலத்தில் லஞ்சலாவண்யம் இல்லாத அரசு நடத்த விரும்புகிறோம். ஆனால், டெல்லி மாநில உணவுத்துறை அமைச்சர் ஆசிம் அகமதுகான் மீது ஊழல் புகார் கிடைத்தது. அது குறித்த வீடியோ காட்சிகளை நானும், மணீஷ் சிசோடியாவும் இணைந்து பார்த்தோம். இதில் உணவுத்துறை அமைச்சர் ஆசிம் அகமதுகான் ஊழல் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, உணவுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆசிம் அகமதுகானை டிஸ்மிஸ் செய்கிறேன். அவருக்கு பதில், இம்ரான் உசைன் உணவு அமைச்சராக நியமிக்கப்படுவார்.
 
மேலும், ஆசிம்கான் மீதான ஊழல் புகாரை சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்போம். நாங்கள் ஊழல் புகாருக்குள்ளான அமைச்சரை உடனே தயவுதாட்சன்யம் இன்றி நீக்கிவிட்டோம். ஊழல் புகாருக்கு உள்ளானது என் மகனாக இருந்தாலும் கடும் நடவடிக்கை  எடுப்பேன்.
 
இதேபோன்று, ஊழல் புகாருக்குள்ளான ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே மற்றும் வியாபம் ஊழல் புகார் கூறப்பட்ட முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் ஆகியோர் பதவி விலக வேண்டும்.