திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 1 மார்ச் 2023 (11:39 IST)

அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா விலகல்.. புதிய அமைச்சர் யார்?

manish
டெல்லி முதலமைச்சர் மணிஷ் சிசோடியா அமைச்சரவையில் இருந்து விலகிய நிலையில் புதிய அமைச்சரவை குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாக டெல்லியின் துணை முதலமைச்சரும், நிதி அமைச்சருமான மணிஷ் சிசோடியா சமீபத்தில் சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை அடுத்து அவருக்கு ஐந்து நாள் சிபிஐ காவல் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து தற்போது புதிய அமைவதற்கான அறிவிப்பு குறித்து வெளியாகி உள்ளது. 
 
டெல்லி அமைச்சரவையில் இருந்து மணிஷ் சிசோடியா மட்டுமின்றி சத்யேந்திர ஜெயின் என்ற அமைச்சரும் விலகியுள்ளார். 
 
இவர்கள் இருவரது விலகலை தொடர்ந்து, சவுரப் பர்த்வாஜ் மற்றும் ஆதிஷி இருவரையும் அமைச்சரவையில் சேர்க்க முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை நிலை ஆளுநருக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வ் எளியாகியுள்ளது.
 
Edited by Mahendran