1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: சனி, 14 ஜனவரி 2023 (20:48 IST)

டெல்லி துணை முதல்வர் அலுவலகத்தில் சிபிஐ திடீர் சோதனை; பலகோடி ரூபாய் மோசடியா?

Manish Sisodiya
மதுபான விற்பனைகள் தனியாருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா அலுவலகத்தில் சிபிஐ திடீரென சோதனை செய்திருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
டெல்லி துணை முதலமைச்சர் அலுவலகத்தில் இன்று சிபிஐ சோதனை செய்து வருகிறது. சிபிஐ சோதனையை வரவேற்பதாகவும் அங்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை என்றும் மனிஷ் சிசோடியா டுவிட் செய்துள்ளார். 
 
மதுபான விற்பனையில் தனியாருக்கு வாய்ப்பு வழங்கும் வகையில் அம்மாநிலத்தின் மதுபான கொள்கை மாற்றப்பட்டதாகவும், பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சிபிஐ இந்த சோதனையை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran