தலைமைச் செயலாளரை உடனடியாக நீக்க டெல்லி முதல்வர் பரிந்துரை: பரபரப்பு தகவல்..!
டெல்லி தலைமைச் செயலாளரை உடனடியாக நீக்க துணைநிலை ஆளுநருக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெல்லியில் செயலாளர் ஆக இருக்கும் நரேஷ் குமார் என்பவர் மகனுக்கு சொந்தமான நிறுவனத்தில் ஊழல் நடந்துள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரில் விசாரணை அறிக்கை தாக்கல் செய்து உள்ள நிலையில் தலைமை செயலாளரின் மகன் தொடர்பான மகன் தொடர்புடைய நிறுவனம் முறைகேடு செய்துள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமைச் செயலாளரை உடனடியாக நீக்க வேண்டும் என்ற பரிந்துரையை துணைநிலை ஆளுநருக்கு அனுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் தலைமைச் செயலாளர் நரேஷ் குமார் மற்றும் கோட்ட ஆணையர் அஸ்வின் குமார் ஆகிய இருவரையும் உடனடியாக பணி நீக்கம் செய்து இருவரும் மீதும் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பரிந்துரையை துணை நிலை ஆளுநர் ஏற்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Edited by Siva