வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வியாழன், 5 மார்ச் 2015 (21:16 IST)

இயற்கை மருத்துவ சிகிச்சைக்காக அரவிந்த் கெஜ்ரிவால் பெங்களூர் விஜயம்

சர்க்கரை நோயாலும், தொடர் இருமலாலும் அவதிப்பட்டு வரும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இயற்கை மருத்துவ சிகிச்சைக்காக இன்று பெங்களூர் வந்தார்.
 
சிகிச்சை பெறுவதற்காக 10 நாட்கள் ஓய்வில் வந்துள்ள அவர் இன்று பெங்களூருவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள இயற்கை மருத்துவ சிகிச்சை மையத்தில் அனுமதிக்கப்பட்டார்.
 
முன்னதாக இன்று மதியம் பெங்களூர் விமான நிலையத்தில் தனது குடும்பத்தினருடன் வந்திறங்கிய கெஜ்ரிவால் நேராக சிகிச்சை பெற சென்றார். அங்கு நான்கு பேர் கொண்ட மருத்துவர்கள் குழு சிகிச்சை அளிக்கிறது. கெஜ்ரிவால் அனுமதிக்கப்பட்டுள்ள ஜிண்டால் இயற்கை தீர்வு மையத்தின் தலைமை மருத்துவர் பாபினா நந்தகுமார் கூறியதாவது:-
 
“இரத்தில் கட்டுக்குள் இல்லாத சர்க்கரை நோய் உள்ளது. கடுமையான இருமலும் அவருக்கு இருக்கிறது. அவருக்கு ஈசிஜி எடுத்துள்ளோம். நாளை அவருக்கு உணவுக்கு முன் பின் இருகட்டமாக ரத்த பரிசோதனை செய்யவுள்ளோம்” என்று தெரிவித்தார்.
 
ஆம் ஆத்மி கட்சியில் ஏற்பட்டுள்ள பல்வேறு குழப்பங்களுக்கிடையே அரவிந்த் கெஜ்ரிவால் 10 நாள் ஓய்வில்  சிகிச்சைக்காக பெங்களூர் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.