Widgets Magazine
Widgets Magazine

Widgets Magazine

பாலியல் பலாத்காரம் செய்தால் தூக்கு தண்டனை - ம.பி. முதல்வர் அதிரடி


Murugan| Last Updated: சனி, 1 ஏப்ரல் 2017 (17:06 IST)
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு தூக்கு தண்டனை அளிக்கும் வகையில் விரைவில் சட்டம் இயற்றப்படும் என மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அதிரடி செய்தியை வெளியிட்டுள்ளார்.

 

 
தற்போது சிறுமிகள் மற்றும் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்படுவது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. முக்கியமாக, மத்திய பிரதேசத்தில் இது நாளுக்கு நாள் பெருகி வருகிறது. எனவே, இதைக் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை செய்த முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சமீபத்தில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
 
அதன்படி, பெண்களை பாலியல் பலாத்காரம் செய்பவர்களுக்கு தூக்கு தண்டனைக் அளிக்கும் வகையில் சட்ட மசோதா ஒன்றை வருகிற குளிர்கால கூட்டத் தொடரில் நிறைவேற்றப்படும். அதன் பின் அந்த மசோதா, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாக்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
 
மேலும், பெண்களை கிண்டல் செய்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :