திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 6 ஆகஸ்ட் 2019 (16:11 IST)

காஷ்மீர் விவகாரம் ...சபாநாயகருக்கு கேள்வி ...லோக்சபாவை அதிரவைத்த தயாநிதி மாறன் !

நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படும் மசோதா பாஜவின் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இன்று மக்களவையில் காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து குறித்த மசோதாவின் மீது விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்து சலுகை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில்  காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த பல்வேறு முக்கிய  கட்சி தலைவர்கள் நேற்று வீட்டு சிறையில் வைக்கப்பட்ட நிலையில் நேற்று மாலை சில தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். இது அம்மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியது. மட்டுமல்லாமல் பல்வேறு கட்சி தலைவர்களும் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
 
இந்நிலையில் தற்போதுவரை காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லா, லோக் சபா உறுப்பினரும் முன்னால் முதல்வருமான பரூக் அப்துல்லா ஆகிய தலைவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றே தெரியவில்லை.
 
இந்நிலையில் இன்று  லோக்சபாவில், தமிழகத்தைச் சேர்ந்த திமுக  எம்.பி தயாநிதிமாறன் : மக்களவை உறுப்பினர் எந்தக் காரணத்தினாலாவது குற்ற வழக்கில் கைதானால்,அதுகுறித்து சபாநாயகருக்கு தகவல் அளிக்க வேண்டும். கைது செய்யப்படுவதற்க்கான நோக்கம், ஒரு வேளை தண்டனைவழங்கப்பட்டால் அதுகுறித்த முழுவிபரம் சபாநாயகருக்கு தெரிவிக்க வேண்டும்.

மேலும் லோக்சபா உறுப்பினர் எதற்காக, எங்கே, ஏன் கைது செய்யப்பட்டார் என்ற விவரங்களையும் சபாநாயகருக்கு தெரிவிக்கவேண்டும். இது சம்பந்தமான தகவ்ல்கள் கிடைக்கப்பெற்ற பிறகு சபாநாயகர் விதி எண் 229, 230 ஆகியவற்றின் அடிபபடையில் சபையில் இதை சபாநாயக்ர் தெரிவிக்க வேண்டும். என்று தனது கருத்தை தயாநிதிமாறன் முன்வைத்தார். 
 
இதனைத்தொடந்து காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, மற்றும் மறுசீரமைப்பு மசோதா மீதான விவாதம் தொடர்ந்து நடைபெற்றது.