காதலனுக்காக தந்தையை கொலை செய்த மகள்!
உத்திரபிரதேசத்தில் காதலனுக்காக தன் தந்தையை மகள் கொலை செய்த சம்பவம் ஒன்று பெரும் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
உத்திரபிரதேசத்தில் விஷ்ணு என்பவர் தனது மனைவி மற்றும் ஒரு மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருந்தார். அவர் தனது வீட்டில் தூங்கி கொண்டிருக்கும் போது அதிகாலை 4.00 மணிக்கு அவரது மகளின் அறையில் சத்தம் கேட்டுள்ளது. இதனையடுத்து, அவர் தனது மகளின் அறைக்கு சென்றுள்ளார்.
அங்கே அவரது மகள் தனது காதலுடன் சிரித்து பேசி கொண்டிருப்பதை பார்த்து அவர் கடுமையான கோபமடைந்தார். பின்பு தனது மகளின் காதலனை எச்சரித்தார். இதனால் அவருக்கும் மகளின் காதலனுக்கும் வாய்தகராறு ஏற்பட்டது.
ஒருகட்டத்தில் வாய்தகராறு சண்டையாக மாறியது. அப்போது மகளும் அவரது காதலனும் சேர்ந்து அவரை மொட்டை மாடியிலிருந்து தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து விஷ்ணுவின் மனைவி தனது மகள் மற்றும் அவரின் காதலன் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.