ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 23 ஆகஸ்ட் 2018 (16:07 IST)

திட்டமிடாமல் அணைகளை திறந்ததே கேரள வெள்ளத்திற்கு காரணமா?

கேரளாவில் தென்மேற்கு பருவமழை எதிர்பாராத அளவு கொட்டித்தீர்த்தால், அங்கு அணைகள் நிரம்பி வேறு வழியின்றி தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், கேரளாவின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாய் மாறியது. 
 
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் வடிய துவங்கியுள்ளதால், மக்கள் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். வீடுகளை இழந்து தவிக்கும் மக்களுக்கு தங்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப காலமும், பொருளும் நிறைய தேவைப்படும். 
 
கேரள மாநிலத்திற்கு உதவி செய்ய பலர் முன்வந்துள்ளனர். நடிகர்கள், அரசியல் தலைவர், பொதுமக்கள் ஆகியோர் தங்களது பங்கிற்கு நிவாரண நிதிகளை வழங்கினர். 
 
இந்நிலையில், கேரள வெள்ளத்திற்கான காரணம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் பேசியுள்ளார். அவர் கூறியது பின்வருமாறு, மொத்த கேரளமும் மீட்பு பணியில் இணைந்து நிற்கிறது. அதே நேரம், அரசு தரப்பு செய்ய தவறியவையும் இருக்கிறது. 
 
பேரழிவை ஏற்படுத்திய வெள்ளத்துக்கு பருவமழை மட்டும் காரணமல்ல. திட்டமிடாமல் அணைகளை திறந்ததும் காரணம். தவறான நேரத்தில், முன்னேற்பாடுகள் இல்லாமல் அணைகள் திறக்கப்பட்டன.
 
மழைப் பொழிவை கணக்கிட்டு, நிலைமையை ஆராய்ந்து, வேறு சாத்தியக்கூறுகளை ஆலோசித்து பின்னர் அரசு நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.