1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 27 மே 2017 (05:54 IST)

முதல்வரை பார்க்கும் முன் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும்: தலித் மக்களை வற்புறுத்திய அதிகாரிகள்

உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் முதல்வர் பதவியை ஏற்ற யோகி ஆதித்யநாத், பல்வேறு அதிரடி திட்டங்களை அறிமுகம் செய்து அனைத்து தரப்பு மக்களிடமிருந்து பாராட்டுக்களை பெற்று வருகிறார். இந்த நிலையில் அவர் அவ்வப்போது சர்ச்சையில் சிக்குவதிலும் தவறுவதில்லை



இந்த நிலையில் முஷார் என்ற தலித் இனமக்கள் முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் அதிகாரிகள் முதல்வரை பார்க்க வந்த அந்த மக்களை சோப்பு, ஷாம்பு போட்டு குளித்தால்தான் முதல்வரை பார்க்க முடியும் என்று கண்டிஷன் போட்டுள்ளனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஷாம்பு போட்டு குளித்தால் தான் முதல்வரை சந்திக்க முடியும் என்று கட்டாயப்படுத்திய அதிகாரிகளுக்கு முஷார் மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அப்படி ஒன்றும் முதல்வரை சந்திக்க வேண்டிய அவசியம் இல்லை என்று கூறியதாகவும், பின்னர் அதிகாரிகள் அவர்களை சமாதானப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.