1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinoj
Last Modified: வியாழன், 7 அக்டோபர் 2021 (19:38 IST)

சிலிண்டர் விலை உயர்வு...இல்லத்தரசிகள் அதிர்ச்சி

இந்தியாவில் என்றைக்கும் இல்லாத வகையில் இந்த ஆண்டு விண்முட்டும் அளவு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது.

அதாவது 9 மாதங்களில் மட்டும் ரூ.285 உயர்ந்துள்ளது. மேலும், சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.25 அதிகரித்து ரூ.900.50 க்கு விற்பனை ஆகிறது.

ஹோட்டல் உள்ளிட்ட வணிகப் பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 75 உயர்ந்து ரூ.1831 க்கு விற்பனை ஆகிறது.

தங்கத்தின் விலை உயர்வு போல் சிலிண்டரின் விலை அதிகரிக்கும் நிலையில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இதனால் அதிகம் பாதிப்படைவதாகத் தெரிவித்துள்ளனர்.