புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 1 ஜனவரி 2022 (15:06 IST)

வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 102.5 ரூபாய் குறைப்பு!

வணிக பயன்பாட்டுக்கான 19 கிலோ எடையுள்ள சிலிண்டர் விலை புத்தாண்டு தினத்தில் குறைக்கப்பட்டுள்ளது.

தினந்தோறும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருவது போல ஒவ்வொரு மாதமும் ஒன்றாம் தேதி சமையல் கியாஸ் விலை உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் எல்பிஜி வெளியிட்டுள்ள அறிவிப்பில் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டரின் விலை 100 ரூபாய் அதிகரிக்கப்பட்டு இருந்தது. இதனால் கடைகள் மற்றும் ஹோட்டல்கள் பெரிய அளவில் சுமைக்கு ஆளாகின. இதையடுத்து இன்று புத்தாண்டு தினத்தில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை 102.50 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.